தமிழகத்தில் கொரானா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக அதன் பணிக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை தற்காலிகமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் பணி அமர்த்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில் திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து
திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய நர்சிங் மாணவிகள், செவிலிய உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர், ஆகியோருக்கு பணி நிரந்தரம் செய்து தரக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று சங்க செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா தலைமையில் மனு அளித்தனர்.