மணப்பாறை பேருந்து நிலையத்தில் இளம்பெண் சுற்றி திரிவதாக மணப்பாறை போலீஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தலைமை காவலர் உமாராணி [பெண் உதவி மையம்] 181 தொலைப்பேசி எண்ணில் தகவல் அறிந்து சுற்றி திரிந்த கவிதா வயது 17 என்ற மாணவியை கைப்பற்றி திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சந்திரமோகன் முன்னனிலையில் ஆஜர் செய்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சந்திரமோகன் விசாரணையின் போது சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் சிறுமியின் தந்தை இறந்து நான்கு வருடம் ஆகிறது. சிறுமியின் தாயார் நான்கு குழந்தைகளை தூத்துக்குடிக்கு அழைத்து சென்று விட்டார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வலிப்பு நோய் இருப்பதால் உறவினர்கள் யாரும் உதவி செய்யாததால் சாப்பாட்டுக்கு வழியின்றி மணப்பாறை பேருந்து நிலையத்தை சுற்றி திரிந்தது தெரியவந்தது.

சிறுமியின் எதிர்கால நலன் கருதி மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சந்திரமோகன் வேலா கருணை இல்லம் காப்பகத்திற்கு பரிந்துரை செய்ததின் பேரில் மணப்பாறை போலீஸ் காவல் நிலைய தலைமை காவலர் உமாராணி, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சந்திரமோகன் மற்றும் பல்நோக்கு மறுவாழ்வு அலுவலர் ரமேஷ், நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி உதவியாளர் தன அந்தோணி ஆகியோர் உதவியுடன் வேலா கருணை இல்லம் காப்பகத்தில் அனபாயன் அவர்களின் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் மணப்பாறை பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறிமிக்கு உதவிய பெண் காவலர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *