ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு ரூ.6 லட்சம் கோடிக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து நாடு தழுவிய அளவில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி இன்று மதியம் பொன்மலை பணிமனை ஆர்மரி கேச் முன்பு எஸ்.ஆர். எம்.யூ.தொழிற்சங்கம் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதைத் தொடர்ந்து எஸ். வீரசேகரன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:
75 ஆண்டுகளாக மக்கள் பணத்தில் உருவான ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக ஒன்றிய அரசு தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது.தற்போது மேலும் 6 லட்சம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்துள்ளது. அதில் ரூ.1,52,496 கோடி மதிப்பிற்கு ரயில் நிலையங்கள், ரயில்வே குடியிருப்புகள்,ரயில் வழித்தடங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பாக தென்னக ரயில்வேயின் 400 ரயில் நிலையங்கள், 265 குட் ஷெட்,ஊட்டி மலை ரயில் உட்பட 4 மலை ரயில்கள்,1400 கி.மீ நீளமுள்ள மின்சார தடங்களுடன் கூடிய வழிதடங்கள் போன்றவற்றையும் இரயில் நிலையங்களை 50 ஆண்டு முதல் 99 ஆண்டு குத்தகைக்கும், இரயில் போக்குவரத்தை 35 ஆண்டு குத்தகைக்கும் தனியாருக்கு தாரை வார்க்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது.
ஒன்றிய அரசின் அந்த முடிவை கண்டித்தும் அந்த முடிவை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அச்சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.ஒன்றிய அரசு தனியார்மய கொள்கையை கைவிடவில்லையென்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.