தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்றது காலை 11:30 மணி முதல் 1.30 மணி வரை நீட் தேர்வு மையத்திற்குள் மாணவர்கள்அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 1.30 மணிக்கு மேல் வரும் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடும் கெடுபிடிகளுடன் அவர்கள் சோதனை செய்யப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருச்சி மாவட்டத்தில் கூடுதலாக நீட் மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டை காட்டிலும் ஒரு மையம் குறைவாக 21 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் முற்பகல் 11மணி முதல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை 40 பேர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்களுக்கு கையுறை, முகக்கவசம் அணிந்து செல்வது கட்டாயம், உணவுகளை உள்ளே கொண்டு செல்ல அனுதியில்லை என்பதால் தண்ணீர் பாட்டிலுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.