தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சி மாநகரில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவச் சிலையை அகற்ற முயற்சிக்கும் ஆளும் அரசை கண்டித்து சிலை அருகாமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் தாணு வரவேற்றார். மாநில இளைஞரணி அமைப்பாளர் வைரவேல் அம்பலக்காரர் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் சங்கர் முன்னிலை வகித்தார். இதில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே கே செல்வகுமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது தமிழகமெங்கும் பரவி வாழ்கின்ற ஒரு கோடி முத்தரையர்களின் ஒற்றை அடையாளமாக இந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை உள்ளது இந்த சிலையை மேம்பாலத்தை கொண்டு வந்து அகற்ற முயற்சிப்பதாக அறிகிறோம் இதனை அறிந்துள்ள முத்தரையர் சமூக மக்கள் கொதித்தெழுந்து போயிருக்கிறார்கள் ஆகவே ஆளும் அரசாங்கம் முத்தரையர் சிலையை அகற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் இல்லையெனில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் வெடிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தளவாய் ராஜேஷ் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் முத்துராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் இளைஞர்கள் திரளாக பங்கேற்றனர் ஆர்ப்பாட்டத்தின்போது அழிக்காதே அழிக்காதே முத்தரையர்களின் அடையாளத்தை அழிக்காதே வேண்டாம் வேண்டாம் மேம்பாலம் வேண்டாம் என கோஷங்கள் எழுப்பப்பட்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஒத்தக்கடை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது