எஸ்.ஆர்.இ.எஸ் மற்றும் என்.எப்.ஐ.ஆர் தொழிற் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பு இன்று காலை இரயில்வே தொழிலாளர்களின் பாதுகாவலர் Dr.இராகவையாஜி உத்திரவின்படி பணிமனை கோட்டத்தலைவர் பவுல் ரெக்ஸ் தலைமையில் DVP சாலமன் மற்றும் DVP/WCM பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஓய்வு பெற்ற நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:-
இரயில்வே , சாலை , விமானம் , கப்பல் , சுரங்கம் உள்ளிட்ட பல துறைகளை தனியாருக்கு தாரைவார்பதையும் , சொத்துக்களை விற்பதையும் கைவிடகோரியும், 15 இரயில்வே விளையாட்டு மைதானங்களை விற்பதை கைவிட கோரியும், 1.1.2020 முதல் 30.06.2021 வரை 18 மாத DA / DR அரியர்ஸை வழங்கிடவும், HRA 01.07.2021 க்கு பதிலாக 01.01.2021 முதல் உயர்த்தி வழங்கிடவும், NDA க்கு சீலிங் முறையை கைவிடவும், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதைக் கைவிடவும், PLB – உச்சவரம்பில்லாத போனஸ் சம்பளத்திற்கேற்ப வழங்கிடவும், – NPS ஐ ரத்து செய்து OPS ஐ அமுல்படுத்திடவும், அங்கீகாரத்திற்கான தொழிற்சங்க தேர்தலை உடனே நடத்திடவும், அப்ரண்டீஸ்களுக்கு எழத்து தேர்வின்றி வேலை வழங்கிடவும், COVID – 19 -ல் பாதித்த தொழிலாளர்களுக்கு 30 நாள் SCL வழங்கிடவும், COVID – 19 -ல் உயிர்நீத்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் Ex.Gratia Payment உடனே வழங்கிடவும்,
COVID – 19 -ல் உயிர்நீத்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கிடவும், MACPS -ல் உள்ள குறைபாடுகளை உடனே கலைந்திடவும், போஸ்டுகளை சரண்டர் செய்யாமல் வேகன்சிகளை உடனே நிரப்பிடவும், இரயில்வே குடியிருப்புகளில் அடிப்படை , பாதுகாப்பு வசதிகளை செய்திடவும், தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திடவும் ஆப்ஷன் அடிப்படையில் PASS / PTO – வை மேனுவல் PASS ஆக வடிங்கிடவும், HRMS சீராகும் வரை செட்டில்மென்ட் பிராசசிங் பழைய முறையில் தொடர்ந்திடவும், மருத்துவமனையில் பணியாற்றியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.இ.எஸ் மற்றும் என்.எப்.ஐ.ஆர் தொழிற் சங்கத்தினர் திருச்சி பொன்மலை ஆர் மரி கேட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.