போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் திருச்சி ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்கு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் காமராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தின் தீர்மானமாக போக்குவரத்து கழகங்களின் 86 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு தரவேண்டிய பஞ்சப்படி உயர்வு முந்திய அதிமுக அரசு ஜனவரி 2016 மாதத்திலிருந்து ஆறு ஆண்டுகளாக தருவதுடன் இக்கோரிக்கையை கண்டு கொள்ளவும் இல்லை, நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் 100 நாட்களில் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார் ஆனால் வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை இப்பிரச்சனை குறித்து வாய் திறக்க மறுக்கிறது பஞ்சப்படி உயர்வு அளிக்க அரசுக்கு மாதம் கூடுதலாக சுமார் ரூபாய் 26 கோடி மட்டுமே தேவை. இந்த நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை அரசு சட்டம் இயற்றி ரூபாய் 5000 உயர்த்தியுள்ளது போக்குவரத்து ஓய்வூதியர்கள் அரசின் அக்கறையற்ற போக்கைக் கண்டு மனவேதனை அடைந்து உள்ளனர் எனவே அரசு இனியும் காலம் தாழ்த்தாது பஞ்சப்படி உயர்வு உள்ளிட்ட ஓய்வூதியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். அதேபோல் பணிஓய்வு வரை மருத்துவக் காப்பீடு பெற்ற ஓய்வூதியர்கள் பணி ஓய்விற்குப் பின் காப்பீட்டு இன்றி முதுமையில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் இக்கோரிக்கையை முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு உடனடியாக மருத்துவ காப்பீடு திட்டத்தை அமலாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நினைவிற் கொண்டு புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ள 1.4. 2003 ஆம் தேதிக்கு பின் நியமனம் செய்யப்பட்ட தொழிலாளர்களை பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது நிலுவையில் உள்ள பனி விலகல் விருப்ப ஓய்வு மற்றும் பனிக் காலத்தில் காலமான அவர்களின் வாரிசுதாரர்களுக்கு தரவேண்டிய ஓய்வுகால பல பலன்களை வழங்க கழகங்களுக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும். தமிழக அரசு ஆந்திர மாநில அரசு செய்தது போல போக்குவரத்து கழகங்களை அரசுத்துறை ஆக்கி தொழிலாளர்களை அரசு பணியாளர்கள் ஆக்குவது தான் தீர்வாக இருக்க முடியும் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வூதியர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் எனவே தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களை ஏற்று அரசு துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.