அகில பாரத மக்கள் கட்சி மற்றும் ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அகில பாரத மக்கள் கட்சி நிறுவனர் ராமநாதன் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அகில பாரத மக்கள் கட்சி நிறுவனர் ராமநாதன் கூறியதாவது.
சுப்பிரமணியசாமி அவர்களிடம் எங்களுடைய பிரதிநிதிகள் பேசியுள்ளார்கள் தமிழ்நாட்டில் உள்ள இந்து அறநிலைத்துறை செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று உள்ளது இது சம்பந்தமாக ஆகம விதிபடி இல்லாமல் தமிழ்நாட்டில் வழக்கு தொடரப்படும் மேலும் இப்பொழுது உள்ள தமிழக அரசு இந்து விரோத அரசாக உள்ளது கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அனுமதி கொடுக்கிறார்கள் இதே நேரத்தில் விநாயகர் ஊர்வலத்திற்கு தடை செய்துள்ளார்கள் இதையெல்லாம் கருத்தில் கொண்டு அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்த மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் அறநிலைத்துறை செயல்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன துறையில் புதிதாக பணியில் அமர்த்தப்பட்டவர்கள் கட்சிக்காரர்கள் மட்டும்தான் தமிழகத்தில் இந்து விரோத கட்சிக்கு எங்களுடைய கட்சி ஆதரவு இல்லை என்று பேசினார்.
இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பேசியது.
புரட்டாசி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பூட்டி உள்ள நிலையில் சாராயக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது எனவே அனைத்து நாட்களிலும் திருக்கோயில்கள் திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் ராமானுஜர் வள்ளுவர் அவர்களுடைய சிலையை நிறுவ வேண்டும். பஞ்சாபின் முதலமைச்சர் ராஜினாமா செய்து உள்ளார் அதே செய்தி தமிழ்நாட்டிலும் வரும் இந்து ஓட்டுவங்கி உருவாகிக்கொண்டிருக்கிறது என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் பாபு பரமேஸ்வரன் திருவாரூர் மாவட்ட தலைவர் ரமேஷ் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சரவண சத்யா திருநெல்வேலி மாவட்ட தலைவர் குரு சங்கர் தூத்துக்குடி மாவட்ட தலைவர் கிருஷ்ணன் கரூர் மாவட்ட தலைவர் ரமேஷ் மதுரை மாவட்ட தலைவர் சக்தி கரூர் மாவட்ட மகளிரணி அபிராமி கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சரவணன் கார்த்திக் மற்றும் ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். திருச்சி மாவட்டத்திற்கு புதிதாக மகேஷ் என்பவரை மாவட்ட தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.