தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக தொழில்நுட்ப பிரிவினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்..
திமுகவின் மாவட்ட தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அருண் என்பவர் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் அவரிடம் மனு ஒன்றை அளித்தார் அதில்.
தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாக உண்மைக்குப் புறம்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருந்தது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி அலுவலகத்தில் விசாரித்ததில் அது போலி எனவும் தங்களது நிறுவனத்தில் வெளியிடப்படவில்லை என்றும் மறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிதியமைச்சர் அவர்கள் இது போலியான ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட செய்தி என்பதை சுட்டிக் காட்டிய பின்னரும் தொடர்ந்து ட்விட்டரில் சவுதா மணி மற்றும் மாரிதாஸ் என்பவரும் தொடர்ந்து அதை நீக்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ இல்லை.
எனவே இதுபோன்ற போலி செய்திகளை திட்டமிட்டு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடுக்கக்கோரி புகார் மனு அளித்துள்ளனர்..
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட அமைப்பாளர் அருண், ஸ்ரீரங்கம் தொகுதி அமைப்பாளர் லட்சுமணன்,மேற்கு தொகுதி அமைப்பாளர் கோவிந்தசாமி, மாவட்ட துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணியன்,மேற்கு தொகுதி சமூகவலைத்தள அமைப்பாளர் ஆசிக், லால்குடி சமூகவலைத்தளம் அமைப்பாளர் தமிழ்வாணன், கொடியாலம் ஊராட்சி அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்…