இந்திய ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திருச்சி பூம்புகார் விற்பனை நிலையம் அருகில் உள்ள தியாகி அருணாசலம் சிலை முன்பு இருந்து சிஐடியு ஏஐடியுசி ஐஎன்டியுசி ஏஐசிசிடியூ எஸ்எம்எஸ் மகஇக அடங்கிய விவசாயிகள் மற்றும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது.
சாலை மறியலின் போது போலீசாருடன் நடந்த தள்ளுமுள்ளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் அவர்களின் சட்டை கிழிந்த காட்சி.
சாலை மறியல் போராட்டத்தின் போது மாதர் சம்மேளனம் நிர்வாகி ராஜேஸ்வரியை போலீசார் தள்ளிவிடும் காட்சி.
மத்திய அரசை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டத்தின் போது போலீசாருடன் நடந்த தள்ளுமுள்ளுவில் ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் அவர்களின் காலில் அடிபட்டு ரத்தம் வழியும் காட்சி.
ஒன்றிய அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் மற்றும் தொழிற்சங்கத்தினர் விவசாயிகள் தங்கள் கைகளில் ஏர் கலப்பை, கதிர் அரிவாள் மற்றும்
கைகளில் சங்கிலியால் இணைத்து பூட்டு போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டத்தில் தனது மகனுடன் கலந்து கொண்ட தந்தை.
இந்த மறியலில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும், பெட்ரோல் டீசல் மீதான கலால் வரிவிதிப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி 500க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்…