திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள காதி கிராப்ட் விற்பனையகத்தில் தீபாவளிக்கான சிறப்பு விற்பனையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்.

தமிழகத்தில் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது போல நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகளைத் திறக்க மாவட்ட வாரியாக கல்வித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்த நிலையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது சுகாதாரத் துறை மருத்துவ வல்லுநர் குழு கருத்துக்களின் படி தான் பள்ளியை திறக்க முடிவு செய்தார்.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு அமைச்சர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆகவே பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் கிடையாது. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்படும் ஒன்றாம் வகுப்பு மாணவன் வெகுநேரம் முகக்கவசம் அணிந்து இருக்க இயலாது. ஆகவே அது தொடர்பாக பின்னர் ஆய்வு செய்து அதற்குண்டான நேரம் அறிவிக்கப்படும். தற்போதைய நிலையில் பிஞ்சு குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்பதே நோக்கம் .அந்த அடிப்படையில்தான் பள்ளிகள் திறக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 98 சதவீத ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பள்ளி கல்வித்துறை ஊழியர்கள் தடுப்பூசி முழுமையாக செலுத்தி இருக்கிறார்கள். பல்வேறு வியாதிகளுக்கு ஆட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மட்டுமே 2சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்த இயலாத நிலையில் இருக்கிறார்கள். பாடத்திட்டம் குறைப்பது குறித்து ஏற்கனவே அரசாணை வெளியிட்டுள்ளது என தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *