இந்திய நாட்டின் 65வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 45 நாட்கள் பல்வேறு வகையில் சட்ட விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடமாடும் சட்ட விழிப்புணர்வு வாகனம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் இன்று நடமாடும் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கிளசன்டன் பிளசட் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனத்தின் மூலம் திரையில் இலவச சட்ட உதவிகள் மற்றும் சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்ற வழக்குகள் பற்றிய விழிப்புணர்வு காட்சிகள் திரையிடப்பட்டன. மேலும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 10 கிராமங்களில் இலவச சட்ட உதவிகளுக்காக இந்த வாகனம் செல்கிறது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி நீதிமன்ற தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.