திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் ஐய்யப்பன். இவரது மகள் மலர்விழி மீரா(19) இவர் தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு பயின்று வந்தார். அதே தெருவில் வசித்து வருபவர் பால முரளி கார்த்தி (37) இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இளம்பெண் மலர்விழி மீராவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மலர் விழி அவருடைய காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு ஜீன் மாதம் முரளி கார்த்திக் மலர்விழியை காதலை ஏற்க மறுத்த காரணத்தால் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இது குறித்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பால முரளி கார்த்திக்கை கைது செய்தனர்.இந்த வழக்கை திருச்சி மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி தங்கவேல் விசாரணை செய்தார். அந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று அவர் பால முரளி கார்த்திக்கு ஆயுள் தண்டனையும் 5லட்சம் அபராதம் விதித்தார்.அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். அந்த தொகையை இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.