பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி தலைமை தாங்கினார். முன்னதாக மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தேசிய தலைவர் சலாம் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் முகமது அலி ஜின்னா மற்றும் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் தீர்மானமாக :-
இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் அவர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாகவும் ஒரு வருட பிரச்சாரத்தை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டும் எனவும்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக போதைப் பொருட்கள் பயன் படுத்துவதும் அதனால் பல குற்றங்களும் தொடர்கதை ஆகி விட்டன எனவே போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகளை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழகத்தில் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மினி மாரத்தான் யோகா ஆரோக்கியம் குறித்தான விழிப்புணர்வு பிரசாரம் என பல்வேறு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற தலைப்பில் நாவம்பர் 16 முதல் 30 வரை தேசம் தழுவிய பிரச்சாரம் நடைபெற உள்ளது.
பாபரி மஸ்ஜித் நீதி வேண்டி மஸ்ஜித் தாக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படவுள்ளதாகவும், .
தமிழ்நாட்டில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் பெண் குழந்தைகள் மாணவர்கள் என பலரும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக ஆசிரியர்களே மாணவிகளிடமும், பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்கின்றனர். தமிழ்நாடு அரசு பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு விஷயத்தில் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும் மேலும் போக்சோ சட்டம் குறித்த சரியான விழிப்புணர்வை அனைத்து பள்ளிகளிலும் பொது தளங்களிலும் கட்டாயம் வழங்க வழிவகை செய்வதோடு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இது போன்ற நிகழ்வு இனி நடைபெறாதவாறு தனி கமிட்டி அமைத்து கண்காணிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.