திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய பூமிநாதன், சொந்த ஊர் நாகை மாவட்டம் தலைஞாயிறு. இவர் 1995 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்துள்ளார். 2020,ம் ஆண்டு ஜூலை நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். மனைவி கவிதா, மகன் குகன்பிரசாத் ஆகியோருடன் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாநகரில் வசித்து வந்துள்ளார்.
எஸ்எஸ்ஐ பூமிநாதன்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 2.50 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் ஆடுகளை தூக்கிக் கொண்டு வந்தவர்களை விரட்டி சென்று பிடிக்க முற்பட்டபோது ஆடு திருடர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இரண்டு சிறுவர்கள் உட்பட 3- கைது செய்யப்பட்டனர்.
கொலை செய்த வாலிபர் மணிகண்டன்.
மேலும் படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ பூமிநாதனின் வீட்டிற்கு இன்று காலை சென்ற தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவரது படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி கவிதா, மகன் குகன்பிரசாத் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ஐஜி பாலகிருஷ்ணன், டிஐஜி சரவண சுந்தர், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், எஸ்.பி சுஜித் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
டிஜிபி சைலேந்திரபாபு அஞ்சலி செலுத்தினார்.
கமிஷனர் கார்த்திகேயன்
டிஐஜி சரவண சுந்தர்
அதனைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் :-
நூறு சதவீத ஆதாரத்தின் அடிப்படையில் தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆடு திருடி சென்றவர்கள் சிறுவர்கள் என்பதால் அவர்களுடன் பூமிநாதன் கனிவுடன் நடந்து கொண்டார். அவர்களை எச்சரிக்கும் நோக்கில் முக்கிய குற்றவாளியின் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த நேரத்தில் தான் கொலை செய்துள்ளனர்.
காவல்துறையினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஆயுதப் பிரயோகம் பண்ணலாம் என சட்டம் சொல்கிறது. தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.
ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தற்காப்புடன் செயல்படவும் துப்பாக்கி எடுத்து செல்லவும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி மற்றும் அவரது மகனுக்கு அரசு வேலையும் தருவதாக உறுதியளித்துள்ளார் அதற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.