சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ள திருச்சி விமான நிலையத்தில் விமான ஓடுதளம் மற்றும் பயணிகள் முனையம் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது, இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலைய விரிவாக்க கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது..
விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று திருச்சி விமான நிலையத்தில் நாடாளமன்ற உறுப்பினர் எம்.பி திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது, இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், விமான நிலைய இயக்குனர், ராணுவ அதிகாரிகள், நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள், இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு கொண்டனர்…
இதன்பின் செய்தியாளர் சந்தித்த எம்.பி திருநாவுக்கரசு கூறுகையில்…
கொரோனா நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமான போக்குவரத்துகள் தற்போது கொரோனா குறைவு காரணமாக விமான எண்ணிக்கை அதிகப்படுத்த பட்டு வருகிறது. திருச்சி விமான நிலைய விரிவாக்கம் பொருத்தவரை ஏறக்குறைய 500 கோடி மதிப்பிலான கட்டிட பணிகள், மற்றும் ஓடுபாதைகள் உள்ளிட்ட வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, ஏற்கனவே 65 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 35 சதவீத பணிகள் ஒன்றரை ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்,
மேலும் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதற்கு தனியாரிடம் மற்றும் ராணுவத்திடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மேலும் வலுப்பெற என்ன தேவை என்பதை இக்கூட்டத்தில் விவாதித்து ஆலோசனை வழங்கப்பட்டது..