திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே கல்லக்குடி காவல் சரகத்தில் 7 இருசக்கர மோட்டார் வாகனங்கள் திருடிய லாரி டிரைவர் கைது கல்லக்குடி போலீஸார் கைது செய்தும் அவரிடமிருந்த 7 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கல்லக்குடி கடைவீதியில் கடந்த 3 ம் தேதி ஒரு இருசக்கர வாகனம் திருடு போனதாக சிமெண்ட் ஆலை ஒப்பந்த பணியாளர் கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி சப் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், ராஜேந்திரன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார்கள் கல்லகம் அருகே இருசக்கர வாகனங்கள் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அப்பகுதியில் மிக வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் வாகன தணிக்கையில் நிற்காமல் மிகவும் வேகமாக சென்று உள்ளார். கல்லக்குடி போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் அரியலூர் மாவட்டம் கல்லகம் கேட் பூண்டி கிராமத்தை சேர்ந்த சந்திரகாசன் மகன் சேகரன் என்கிற சந்திரசேகரன் வயது 44. லாரி டிரைவர். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலம் ஆரம்பித்த பின்பு டிரைவர் வேலை கிடைக்காததால் இருசக்கரமோட்டார் வாகனங்கள் திருடும் தொழிலை ஆரம்பித்தார்.
முதன்முதலில் திருச்சி டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி, பிச்சாண்டார்கோவில் பகுதியில் இரண்டு இரு சக்கர மோட்டார் வாகனங்களையும், தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு கல்லக்குடி சிமென்ட் ஆலை லாரி செட்டில் பளிங்காநத்தம் பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் கல்லக்குடி கடைவீதி மற்றும் லாரி செட்டில் 4 பேரின் இருசக்கர மோட்டார் வாகனங்கள் என மொத்தம் 7 வாகனங்கள் திருடி உள்ளார். தொடர்ந்து கல்லக்குடி போலீசார் விசாரணை செய்ததில் பூண்டி கிராமத்தில் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த மீதம் உள்ள 6 வாகனங்களையும் கைப்பற்றினார்கள்.மேலும் இவர் மீது கல்லக்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.