திருச்சி திருவெறும்பூர் 65வது வார்டு மாநகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் விரிவாக்க பகுதியில் அடிப்படை வசதிகளான சேறு சகதியுமான தெருவை சீர் செய்யவும், குடிநீர், தெருவிளக்கு கேட்டும் அப்பகுதியில் வாழும் பொதுமக்களை அச்சுறுத்தும் வெறிநாய்கள், பன்றிகளை பிடித்திட கோரி பலமுறை இப்பகுதி மாநகராட்சி அதிகாரிகளிடமும், மேலும் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனரிடமும் புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால்
இன்று காலை நேதாஜி நகர் விரிவாக்க பகுதி நல சங்கத்தின் சார்பில் சேறும் சகதியுமான சாலையில் அப்பகுதி மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு நல சங்க தலைவர் குத்புதீன் தலைமையில் குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பா.லெனின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மாவட்ட குழு உறுப்பினர் மணிமாறன், நல சங்க செயலாளர் இளையராஜா, நேதாஜி நகர் நல சங்க தலைவர் கணேசன், நல சங்க துணைத்தலைவர் திருவேங்கடம் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சேறும் சகதியுமான சாலையில் நாற்றுகளை நட்டு போராட்டம் நடத்தினர்.