திருச்சி முசிறி உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியை தீபா தலைமையில் நடைபெற்றது.
அன்னை தெரசா டிரஸ்ட் இயக்குனர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் விழிக்கண் குழு மாவட்ட உறுப்பினர் பிரபு ,சைல்டு லைன் 1098 ஒருங்கிணைப்பாளர் அஷரப், அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் கனகா மற்றும் டாக்டர் மீரா மோகன் ஆகியோர்
குழந்தைகளின் உரிமைகள் , குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் 1986, குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012,பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்தும்
குடும்ப வன்முறை சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம்,பணித் தளத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ,பெண்களுக்கான உதவி மைய எண் 181 குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் குழந்தைகள் மத்தியில் வெளியிடப்பட்டும், ஒட்டப்பட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர்.