திருச்சியில் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன், உலக சிலம்பம் இளையோர் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் 2வது மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கொடைக்கானல் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி செயலாளர் சுவாமிகள் கங்காதரனந்த குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சிலம்பம் கோர்வை தலைவரும், தமிழ்நாடு சிலம்பம் கோர்வை துணைத் தலைவருமான மோகன் வரவேற்பு ரையாற்றினார். கி.ஆ.பெ. விசுவநாதன் கல்வி குழும பள்ளி கமிட்டி சேர்மன் செந்தில் முன்னிலை வகித்தார்.திருச்சி மாநகர காவல்துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி விழாவுக்கு தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், ஜி.வி.என். மருத்துவமனை சேர்மன் ஜெயபால் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் கலைச்செல்வன், இதய நோய் மருத்துவர் கிருஷ்ணன், தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன் துணைத் தலைவர் மாணிக்கம், தமிழ்நாடு அமெச்சூர் காபாடி கழக முன்னாள் பொதுச் செயலாளர் ராஜேந்திரன்,
சர்வதேச கபாடி நடுவர் அண்ணாதுரை, சர்வதேச தடகள வீரர் அண்ணாவி, சர்வதேச கபடி நடுவர் கஜராஜன், தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன் துணைத் தலைவர் ராஜ்குமார், இளையராஜா ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
இந்திய சிலம்பம் கோர்வை செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார். இப்போட்டியில் சுமார் தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.