இணையவழி வழக்கு தாக்குதலுக்கான உதவி மையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி கிளாஸ்டோன் பிளசெட் தாகூர் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் இன்று திறந்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி புதிய வழக்குகள் தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள் படிப்படியாக இணைய வழியில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாக புதிய வழக்குகளை இணைய வழியாக தாக்கல் செய்வதற்கு வழக்கறிஞர்களுக்கு தேவைப்படும் பயனர் முகவரி உருவாக்கி கொடுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற சேவைகளுக்கான உதவி மையம் திருச்சி நீதிமன்ற புதிய கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் அறையில் இன்று தொடங்கப்பட்டது. இந்த புதிய மையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி கிளாஸ்டோன் பிளசெட் தாகூர் திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் முதலாவது மாவட்ட கூடுதல் நீதிபதி செல்வம் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி கோகிலா குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொதுச் செயலாளர் வெங்கட் துணை தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்