தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 இலவச விபத்து சிகிச்சை திட்டத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் நடைபெற்ற விபத்து மற்றும் அவசர சிகிச்சை கருத்தரங்கில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடந்தது. இவ்விழாவிற்கு ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிகிச்சை மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
மேலும் இத்திட்டம் குறித்து பேசுகையில் இத்திட்டமானது விபத்தில் காயமடைந்தவர் ஆம்புலன்ஸ் வசதியுடன் விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகே உள்ள எந்த ஒரு மருத்துவ மனையாக இருந்தாலும் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவர் அவர் அனுமதிக்கப்பட்ட நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு முழு செலவையும் அரசே ஏற்கும் விபத்தில் பாதிக்கப்பட்டவர் வறுமை கோட்டிற்கு கீழேயும், வறுமைக் கோட்டிற்கு மேலே இருக்கலாம். அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இத்திட்டம் அவருக்கு பொருந்தும் என தெரிவித்தார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்துகொண்டு பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக ஹர்ஷ மித்ரா புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் சுசி பிரியா கோவிந்தராஜ் வரவேற்புரையாற்றினார். மணிகண்டம் ஒன்றிய பெருந்தலைவர் கமல கருப்பையா மற்றும் நாகமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஹர்ஷமித்ரா மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.