கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனாவின் 2-ம் அலை சற்று அதிகமாக பரவி தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் தற்போது மடிந்தும், லட்சக்கணக்கானோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தின் புதிய முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதும். கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகிற 24-ஆம் தேதி வரை கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல் படுத்தி உள்ளார். அதிலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு காலை முதல் மதியம் 12 மணி வரை காய்கறிகள் மளிகை கடைகள் மீன் மார்க்கெட் கறிக் கடைகள் இயங்கலாம் என அனுமதி அளித்தனர்.
மேலும் 12 மணிக்கு மேல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அதனை கண்டுகொள்ளாமல் சமூக இடைவெளி இன்றி கூட்டம் கூட்டமாக செல்லும் பொதுமக்கள். சத்தியமா நம்புங்க இது முழு ஊரடங்கு தான்!!!!!