திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் காவலர்களுக்கான விளையாட்டு போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது அதன் துவக்கவிழா இன்று நடைபெற்றது இதில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார் இதில் 7 மண்டலங்களில் இருந்து 500 மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகள் கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்நிலையில் 61வது மாநில அளவிலான விளையாட்டு போட்டி இன்று துவங்கியது.
இதில் வாலிபால், பாஸ்கெட் பால் உள்ளிட்ட 9 வகையான போட்டிகள் நடைபெற உள்ளது பரிசளிப்பு விழா ஜனவரி 8ஆம் தேதி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
போட்டிகளில் துவக்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்த ஐஜி பாலகிருஷ்ணன் கூறும்போது:
“இந்த விளையாட்டு போட்டிகளில் 7 மண்டலங்களில் இருந்து 500 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.மத்திய மண்டலத்தில் குண்டாஸ் கடந்த ஆண்டைவிட தற்போது அதிகரித்து உள்ளது. கொலைகள் 8 சதவீதம் குறைந்துள்ளது ரவுடிகள் கொலை 2020 இல் 27 கொலைகள் நடந்துள்ளது ஆனால் இப்போது அது 18 ஆக குறைந்துள்ளது, கஞ்சா மற்றும் குட்காவிர்க்கு எதிராக தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்த வருகிறது கடந்த வருடத்தை கணக்கிடும்போது இந்தவருடம் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது …
சிறார்களை பல குற்றவாளிகள் குற்றத்திற்கு பயன்படுத்து வருகின்றனர் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது… அது மற்றுமின்றி சிறுவர்கள் குற்ற செயல்களில் இடுபடாமல் இருக்க காவல் சிறுவர் மன்றம் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம் இதனால் சிறுவர்கள் படிப்பு கடந்து மற்ற நேரங்களில் விளையாட்டு போன்ற நிகழ்வுகளில் கவனம் செலுத்தமுடியும்..
காவலர்கள் இரவு நேரங்களில் பிரச்சனை அதிகம் நடைபெறும் இடங்களில் டிஜிபி உத்தரவு படி துப்பாக்கிகளை எடுத்துச்செல்ல அனுமதித்து வருகிறோம். காவல்துறை சார்பாக கொரோனா சங்களியை உடைக்க அரசு அறிவுரைகளை கேட்டு நடக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் மாஸ்க் அணியாதவர்களுக்கு மாஸ்க் கொடுக்கப்படுகிறது மேலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது” என்றார்