தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது பள்ளியில் நடக்கும் சமூகவிரோத சம்பவம் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு நிகழும் பாலியல் தொந்தரவுகளை கண்காணிக்க இந்த சிசிடிவி கேமராக்கள் பயன்படும் என்றும். இதை அனைத்து தமிழக அரசு பள்ளிகளிலும் கொண்டுவர அரசு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கூறுகின்றனர்.
இது குறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியம் சமூக விரோத செயல்களில் இருந்து பள்ளிக்கூடத்தை பாதுகாக்கவும் இதற்கு உத்தரவிடக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரணையின்போது அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான முந்தைய உத்தரவுகளை நிறைவேற்ற இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரத்திற்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் சமீபகாலமாக பெண் பிள்ளைகளிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்யும் ஆசிரியர்களின் செயல் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனால் மாணவிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும், ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு உரிய தீர்வு என்பது இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை. அவ்வாறு ஆசிரியர்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் மாணவிகளை உரிய முறையில் எடுத்துக்கூறி கூறி அவர்களுக்கு உளவியல் ரீதியான கலந்தாய்வு வழங்கி அவர்கள் மனதில் ஒரு தனித்தன்மை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.