60 வயதை கடந்தவர்கள், முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இன்று முதல் கொரொனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து இன்று திருச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை துவக்கி வைத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் சிவராசு,
திருச்சி மாவட்டத்தில் 36,760 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியான நபர்களாக இருக்கின்றனர். திருச்சியில் 7 சிறப்பு கொரொனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் 2185 படுக்கை வசதிகள் உள்ளன. இது தவிர அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 6397 படுக்கை வசதிகள் இருக்கிறது.மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியாக 88சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 58சதவீதமும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதே போல 15முதல் 18வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை திருச்சி மாவட்டத்தில் 1,26,400 இதில் முதல் தவணையாக 1,01,980 பேர் என 80.7 சதவீதம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் ஆக்ஸிஜன் வசதி போதுமான அளவு இருக்கிறது. டெல்டா மாவட்டங்கள் முழுவதும் விநியோகிக்கும் வகையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறது. தினமும் 6000 கொரோனா மாதிரிகள் வரை எடுக்க திட்டமிட்டுள்ளோம். ஒமிக்ரான் மட்டுமல்ல டெல்டா வகையும் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் இந்த அலையில் 3000 முதல் 4000 வரை பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. கடந்த 2அலைகளில் திருச்சி மாவட்டத்தில் கொரொனா பாதிப்புகள் கட்டுக்குள் இருந்தது. அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பே காரணம். இந்த முறையும் அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம்.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் Random Test எடுக்க திட்டமிட்டுள்ளோம். ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு என்ன வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்குகிறார்களோ அதை திருச்சி மாவட்டத்தில் பின்பற்றுவோம் என கூறினார்.