ஆவின்பால் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 18 நாட்களுக்கு பிறகு ஜனவரி மாதம் 5ம் தேதி அன்று கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர் பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வார நிபந்தனை ஜாமினை உச்ச நீதிமன்றம் வழங்கியது, மேலும் ராஜேந்திர பாலாஜி தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் விருதுநகரை விட்டு ராஜேந்திர பாலாஜி வேறெங்கும் வெளியேற கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில்.இன்று காலை 7.10 மணிக்கு திருச்சி மத்திய சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அங்கிருந்து நேராக திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள கண்ணப்பா ஹோட்டலில் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு காலை உணவு சாப்பிட்டு அங்கிருந்து 9.50 மணி அளவில் விருதுநகர் மாவட்டத்திற்கு காரில் புறப்பட்டார். அப்போது கட்சியினரை பார்த்து கும்பிடு போட்ட படி சென்றார்.