திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, ஊரடங்கு அமலில் உள்ளபோது டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில் மது பாட்டில்களைக் கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வதை தடுக்க அமலாக்க பிரிவு ஆய்வாளர் சுதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் திருச்சி முதலியார் சத்திரம் அருகில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் பாலக்கரையைச் சேர்ந்த காளிமுத்து ஆகியோரைக் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.2,15,000/- மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.