தை முதல் நாளான இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். மேலும், வழிபாட்டுத் தலங்களில் காலை முதலே பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஆனால், இந்த வருடம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கொரோனோ, ஒமிக்கிரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு அனைத்து வழிபாட்டுத் தலங்களை மூட உத்தரவிட்டு உள்ளதால்
திருச்சியில் புகழ்பெற்ற மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் வாசலில் நின்று சுவாமியை வணங்கி விட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.