தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கட்டுப்பாடுகள் அடங்கிய ஊரடங்கை கடந்த மே 10ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை அமல்படுத்தினார். கடந்த 4 நாட்களாக இந்த ஊரடங்கை மதிக்காமல் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றனர்.
அதேபோல திருச்சி காந்தி மார்க்கெட்டை சுற்றி உள்ள பகுதிகளில் சாலை போக்குவரத்திற்கு இடையூறாகவும், பஸ் ஸ்டாப்பை ஆக்கிரமித்தும், தரைக்டைகள் அமைக்கப்பட்டு கூட்ட கூட்டமாக பொது மக்களை கூட்டி சமூக இடைவெளி இன்றி விற்பனை செய்து கொண்டிருந்தனர். மாநகராட்சி சார்பில் கடந்த 4 நாட்களுக்கு முன் தரை கடைகளை அப்புறப்படுத்த மாறு அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து அப்பகுதியில் தரைகடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காய்கறிகள், வாழை இலைகள் உள்ளிட்ட தரை கடைகள அதிரடியாக அப்புறப்படுத்தினர்.