திருச்சி மாவட்ட கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது .

இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு,
பள்ளிகல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்
லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்,
துறையூர் சட்டமன்ற உறுப்பினர்
ஸ்டாலின் குமார்,
மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது,
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மண்ணச்சநல்லூர்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
கதிரவன், முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன்,
ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம். மாநகர காவல்துறை ஆணையர் அருண்,
மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பழனிகுமார், அரசு மருத்துவமனை டீன் வனிதா,
சுகாதாரத்துறை
அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர்கே .என்.நேரு பேசுகையில்…
தொடர்ந்து தமிழகத்தில் முன் களப்பணியாளர்கள் இழப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது எனவே முன்கள பணியாளர்களுக்கான பாதுகாப்பை இந்த அரசு விரைந்து உறுதி செய்திடும் என்றும் மற்ற பொதுமக்களை ஊரடங்கு காலத்தில் விழிப்புணர்வு மூலம் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ள வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *