திருச்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
பெருகமணி ஊராட்சியில் போலி ரசீது பயன்படுத்தி பணம் வசூல் செய்து மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த முறைகேடு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க .தலைவர் ராஜசேகரன் தலைமையில், அந்தநல்லூர் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரன் ஊராட்சிமன்ற துணை தலைவர் மணிமேகலை லட்சுமணன் , மாவட்ட துணைத் தலைவர் இந்திரன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இன்று கலெக்டர் சிவராசு விடம் ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில், பெருகமணி ஊராட்சியில் போலி ரசீது மூலம் பல்லாயிரக் கணக்கில் பணம் மோசடி நடந்துள்ளது. அரசின் வரி வசூல் புத்தகங்கள் சொந்தமாக தயாரித்து பணம் வசூல் செய்துள்ளனர் . ஆகவே சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது .புகாரின் போது பெருகமணி ஊராட்சிமன்ற கவுன்சிலர்கள் அழகேஸ்வரி, செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.