குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பயணிகளின் உடமைகளை மோப்பநாய் உதவியுடன் தீவிரமாக சோதனை செய்தனர்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, நாகப்பட்டினம், திண்டுக்கல், சேலம், உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் அதேபோல் கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களுக்கு எனப் பல்வேறு பகுதிகளுக்கும் நூற்றுக் கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இதில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வருகிற 26ஆம் தேதி குடியரசு தினவிழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு காவலர்கள் மோப்பநய் உதவியுடன் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகள் கொண்டு செல்லும் உடமைகளை முழுவதுமாக ஆய்வு செய்த பிறகே ரயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.