திருச்சி மாநகராட்சி 20 வது வார்டு அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு சௌராஷ்டிரா தெரு மற்றும் மணியகாரர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஒன்று சேர்ந்து ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது 20 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜவஹர்லால் நேரு பேசுகையில்:-
அதிமுக ஆட்சியின் போது என்னென்ன சாதனை திட்டங்கள் தொடர்ந்து செய்யப்பட்டன என வாக்காளர் பெருமக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். மேலும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் கருவறை முதல் கல்லறை வரை அரசு வழங்கிய திட்டங்களைக் குறித்து விரிவாக எடுத்துரைத்து கூறினார். தற்போது உள்ள திமுக ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்றும் மக்களிடம் எடுத்துக் கூறினார்.
பிரச்சாரத்தின் போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுத்தார்களா என்று பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பொதுமக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறினார்கள்.
மேலும் பொங்கல் பண்டிகையின்போது அரசு கொடுத்த பொருட்களை தரம் எப்படி இருந்தது என்று நான் கூறி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை உங்களுக்கு நன்றாக தெரியும் பொதுமக்களுக்கு வழங்க கூடிய பொருட்களில் அலட்சியம் காட்டி உள்ளனர். திமுக அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் என்னை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
இந்த பிரச்சாரத்தின் போது 20 வது வேட்பாளர் ஜவஹர் லால் நேரு முதியவர்களின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார் அப்போது அதிமுக நிர்வாகிகள் சுரேஷ், தியாகராஜன், கண்ணன், பொன்ராஜ், இன்ஜினியர் கார்த்திக் உள்ளிட்ட தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.