தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சியில் 57.25 சதவீதமும் , 5 நகராட்சிகளில் 70.44 சதவீதமும், 14 பேரூராட்சிகளில் 74.87 சதவீதம் என மொத்தம் 61.36 சதவீத வாக்குகள் பதிவாகியது.
திருச்சி மாநகராட்சியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கலெக்டர் சிவராசு நேரில் ஆய்வு செய்து வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் பகுதிகளை பார்வையிட்டு தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அருகில் மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் ஆகியோர் உள்ளனர்.