திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள சக்தி ஸ்லங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமான சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பஞ்சப்பிரகார விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் பக்தர்கள் இன்றி கோயிலில் நடைபெறுகிறது.
இன்று பஞ்ச பிரகார திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனிதநீர் தங்க குடம் மற்றும் வெள்ளி குடத்தில் எடுத்து வந்து சிறப்பு பூஜைகளுடன் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தற்போது கோயில்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத தால் கோவில் நிர்வாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.