இதுகுறித்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) முதுநிலை இயக்குநர் (தேர்வுகள்) சதானா பரசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
“படிப்பில் சிறந்து விளங்கும் எஸ்.சி. மாணவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவச உறைவிட வசதியுடன் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் சேர்ந்து பயில மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகார மயமாக்கல் அமைச்சகம் செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின்கீழ் 3,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியுடைய மாணவர்களை தேர்வு செய்வதற்கு என்டிஏ சார்பில் மே மாதம் 7-ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே, இந்தத் திட்டத்தின்கீழ் சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவசமாக படிக்க விரும்பும் எஸ்.சி. மாணவர்கள் ஏப்ரல் மாதம் 12-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.nta.ac.in) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் கிடையாது. தகுதிகள், தேர்வு முறை, தேர்வு மையங்கள், ஆன்லைன் விண்ணப்பமுறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் https://shreshta.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் அடிக்கடி என்டிஏ இணையதளத்தை பார்த்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.