நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து
திருச்சி மாவட்ட கலெக்டராக திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டார். மேலும் திருச்சி மாவட்ட எஸ்பி ஆக கோவை மாநகர டிசிபி மயில்வாகனன் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டராக மீண்டும் சிவராசு நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளத.