தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் தமிழகத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருந்த நிலையில், இன்று முதல் வங்கிகள் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அனைத்து இந்திய வங்கி அலுவலர்கள் அசோசியேசன்ஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “வங்கிகள் காலை 9.00 மணி முதல் காலை 11.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கவேண்டும், வங்கி கிளைகள் மதியம் 12.00 மணி வரை திறந்திற அனுமதி வழங்கவேண்டும், வங்கிகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்கள் மட்டுமே இயங்கவும், அத்தியாவசிய சேவைகளான வைப்பு, பணம் அனுப்புதல் மற்றும் அரசு வணிகம் தொடர்பான பணிகளே மட்டுமே செய்யவும் அனுமதிக்க வேண்டும். அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி படுத்தவேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.