திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்;-
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தந்த மக்களுக்கு தி.மு.க. அரசு காணிக்கையாக சொத்து வரியை உயர்த்தி இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்கு பின்னர் தமிழகம் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே கடந்த ஆட்சியில் தான் கடன் என சொல்ல முடியாது. ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் சொத்து வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக தமிழக முதல்வரிடம் விவாதிக்க தயாராக இருக்கின்றோம் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியன், மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.பி. முரளிதரன், மாநிலச் செயலாளர் பார்வதி நடராஜன். மாநகர் மாவட்ட பார்வையாளர் லோகிதாசன், புறநகர் மாவட்ட பார்வையாளர் தங்க ராஜைய்யன், பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல. கண்ணன், மாநில மகளிர் அணி செயலாளர் லீமா சிவகுமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் கௌதம் மற்றும் மாநில, மாவட்ட, அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொது செயலாளர் காளீஸ்வரன் வரவேற்றுப் பேசினார் மாவட்ட பொதுச்செயலாளர் ஒண்டிமுத்து நன்றி கூறினார்.