திருச்சி மாவட்ட AITUC தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் மாவட்ட பொருளாளர் சையது அபுதாஹிர் தலைமையில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. AITUC மாவட்ட பொருளாளரும் கவுன்சிலர் சுரேஷ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:- தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், தெருவோர வியாபாரிகள் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்த கோரியும், மாநிலம் முழுவதும் தெரு வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை கொடுத்து வியாபாரக் குழுவினை நடத்திடக் கோரியும் ,வியாபாரக் குழுவினை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திடக் கோரியும் ,அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தரைக்கடை மாவட்ட பொது செயலாளர் அன்சர் தீன்,மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முருகன் பொன்மலை பகுதி செயலாளர் ராஜா திருவரம்பூர் தரைக்கடை சங்க செயலாளர் பழனிச்சாமி மாவட்டத் தலைவர் சிவா, ஏ ஐ டி சி மாவட்ட தலைவர் நடராஜா உள்ளிட்டோர் உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் மருதாம்பாள்,. நிர்மலா ரஸியா பேகம், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன், சந்தோஷ் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார், என் எஸ் பி ரோடு அருண், முஸ்தபா, தெப்பக்குளம் வழக்கறிஞர். பெருமாள் உமர், நந்தி கோவில் தெரு சரவணன் உள்ளிட்ட தரைக்கடை வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்