Author: JB

மனைவி கர்ப்பம் – கலெக்டரிடம் புகார் அளித்த கணவன்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக இன்று…

திருச்சியில் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம் – பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு:-.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள கரட்டுப்பட்டியில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015ல் அங்குள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. அப்பொழுது தங்கராஜ் என்பவர் தனது செலவில் மூலவர் காளியம்மனுக்கு கற்சிலையை செய்தார்.…

மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திருச்சியில் வழக்கறிஞர்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணி:-

மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு மூன்று குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதினியம் என்கிற பெயரிடப்பட்ட அந்த சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல்…

திருச்சியில் நடந்த காதல் தகராறில் இருதரப்பு மோதல் – வாலிபர் பலி!!!

திருச்சி திருவானைக்காவல் அருகே உள்ள திருவளர்சோலை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). இவர் பொன்னி டெல்டா பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 24). திருவளர் சோலையில் பழக்கடை வைத்துள்ளார். விக்னேஷின் உறவினர் பெண்ணை நாகேந்திரன்…

புதிய 3 குற்றவியல் சட்டங்கள் பாராளு மன்றத்தில் மீண்டும் விவாதத்தில் நடைமுறைப் படுத்த வேண்டும் – வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொது பொதுக்கூட்டம் கடந்த 29.6.2024 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. அதில் புதிதாக வடமொழி தலைப்புடன் சட்டமாக்கப்பட்டுள்ள பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ் ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறுதல் தொடர்பாக…

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் 3-ம் ஆண்டு ஸ்ரீ ஜெகந்நாத் ரத யாத்திரை திருச்சியில் நடந்தது:-.

ஸ்ரீ ஜெகந்நாத் ரத யாத்திரை மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது இந்த ரத யாத்திரையானது திருச்சி அண்ணா சிலை ரவுண்டானா அருகே தொடங்கி காவேரி பாலம் மாம்பழச் சாலை வழியாக சென்று அம்மா மண்டபம் அருகே உள்ள ஸ்ரீரங்கம்…

தமிழக உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர் களுக்கான நல சங்க துவக்க விழா திருச்சியில் நடைபெற்றது.

தமிழக உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்களுக்கான நலச் சங்க துவக்க விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிளாசா ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த துவக்க விழாவிற்கு தமிழக உரிமை பெற்ற துப்பாக்கி உரிமையாளருக்கான நல சங்கத்தின் மாநில…

துபாயிலிருந்து திருச்சி ஏர்போர்ட் வந்த பயணியிடம் 752 கிராம் தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை நடைபெற்று வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் அதிக அளவில் கடத்தல் தங்கம் பிடிபடுவது வாடிக்கையாக உள்ள நிலையில், துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம்…

ஏர்போர்ட்டில் 1.16 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்:-

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் பயணிக்கும் பயணிகளில் சிலர் தங்கம் கடத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், இன்று சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இந்த…

விக்கிரவாண்டி தேர்தலில் நோட்டாவுக்கு ஓட்டு கேட்டு நூதன பிரச்சாரம் – சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் திருச்சியில் பேட்டி:-

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 10-ம் தேதியும் அதனை தொடர்ந்து 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. இந்தக் கட்சியின் கூட்டணியில் இருப்பதால் தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அப்படி இருந்தும் தேர்தல்…

பிரபல ரவுடிக்கு துப்பாக்கி சூடு திருச்சி போலீசார் அதிரடி:-

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் நடந்த பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல் ஆங்கரை மலைய புரத்தைச் சேர்ந்த நவீன் குமார் என்பவரை வெட்டி படுகொலை செய்தனர்.இந்த கொலை தொடர்பாக லால்குடி கோவிந்தா புரத்தை சேர்ந்த…

திருச்சி ஆர்.கே ராஜா சார்பில் நடிகர் விஜய்யின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரின் 82வது பிறந்தநாளை முன்னிட்டு முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நடிகர் விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் 82 ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது பிறந்தநாள் விழாவில் சென்னை சாலிகிராமம் மந்திர் முதியோர் இல்லத்தில் புடவைகளும் இனிப்புகளும் திருச்சி ஆர் கே…

3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜனநாயகத்திற்கு எதிராகவும் அரசியலமைப்புக்கு எதிராக மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மத்திய மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக…

நடிகர் விஜய் தி.மு.க. சார்ந்த கொள்கைகளை எடுக்க எடுக்க தமிழகத்தில் பா.ஜ.க ஓட்டும், ஆதரவும் வளரும் – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திருச்சியில் பேட்டி:-

திருச்சியில் நடந்த பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் இல.கண்ணன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய போது…. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் விக்கிரவாண்டியில், பா.ம.க.,வின் அன்புமணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளனர். இடைத்தேர்தலில்…

பிச்சாண்டார் கோவில் ஆஸ்கார் லயன் சங்கத்தின் 2024-2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சியில் நடைபெற்றது.

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களில் அங்கமான பிச்சாண்டார் கோவில் ஆஸ்கார் லயன் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீ பி.எஸ் ஹாலில் நடைபெற்றது. இந்தப் பதவி ஏற்பு விழாவிற்கு பிச்சாண்டார்…