தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது.
இறைத் தூதரான நபிகள் நாயகம் அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய வரலாற்றுப் பெருமைமிக்கவர். நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள், மீலாது நபி திருநாளாக உலகம்முழுவதும் வாழ்கிற…