Category: திருச்சி

இந்திய நாட்டின் பிரதமராக மோடி வருவார் அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் திருச்சியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டி.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தெய்வீக ஆசியோடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு திருச்சி மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி விஎஸ்எம் மஹாலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட…

திருச்சி முக்கொம்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ரூ4.50 லட்சம் மதிப்புள்ளான மீன் குஞ்சுகளை அமைச்சர் கே என் நேரு ஆற்றில் விட்டார்.

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஆற்றில் கட்லா, ரோகு, மிர்கால், கல்பாசு போன்ற நாட்டு இன மீன் குஞ்சிகளை பெருக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக…

திருச்சியில் 2வது நாளாக பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற் சங்கத்தினர்.

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட 23 சங்கங்கள் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில்…

வாக்குறுதியை நிறைவேற்றாத எம்எல்ஏ கதிரவன் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு. பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

திருச்சி, மண்ணச்சநல்லூர், மேலசீதேவிமங்கலம் கிராமத்தில், ஐந்து தலைமுறைகளாக, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்து குடியிருந்து வரும், பூர்வ குடிகளாகிய கிராம மக்களுக்கு, பட்டா வழங்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். மேலும் இந்த இடத்தில், மண்ணச்சநல்லூர்…

உலக நன்மை வேண்டி ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் இன்று நடைபெற்றது.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி மஹோத்ஸவ. விழாவின் முதல் நாளான இன்று உலக நன்மைக்காகவும் சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் இன்று…

மத்திய அரசு உரிய தீர்வு காணவில்லை என்றால் பொது வேலை நிறுத்த போராட்டம் – எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் கண்ணையா எச்சரிக்கை.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ., ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், ‘மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க கூடாது’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை…

திருச்சியில் ஆக்கிரமிப்பு செய்த கோவில் நிலத்தை மீட்டெடுக்க கோரி கலெக்டரிடம் விவசாயி மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள்…

திருச்சியில் கேப்டன் விஜய காந்துக்கு திருவுருவ சிலை நிறுவ வேண்டும் – நாடகக் கலைஞர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

மறைந்த புரட்சிக் கலைஞர் டாக்டர் கேப்டன் விஜயகாந்த் சினிமா துறை, சமூக சேவை, அரசியல் துறை என மூன்று துறையிலும் செய்த சேவையானது அளவற்றது. நாட்டுப்புற நாடக கலைஞர்களுக்கு ஆசானாக திகழ்ந்தவர். அதன் அடிப்படையில் மறைந்த புரட்சிக் கலைஞர் டாக்டர் கேப்டன்…

தலைவர் ராகுல் காந்தியின் 2ம் கட்ட நடைப்பயணம் இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கும் – திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த விழாவில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சியினருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். அருகில் கவுன்சிலர்கள் ரெக்ஸ், கோவிந்தராஜன், மகளிர் அணி…

நகை, செல்போன் கேட்டு வந்தால் பொய் வழக்கு போடுவேன் என காவல் ஆய்வாளர் மிரட்டல் விடுவதாக கலெக்டரிடம் இளம் பெண் புகார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த மரினா பேகம் என்பவர் புகார் மனு ஒன்றை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் இன்று அளித்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி…

திருச்சியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது. பணம், வாகனங்கள் பறிமுதல்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள குமுளூர் புள்ளம்பாடி சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காரில் கடத்தி வருவதாக காணக்கிளியநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த காணக்கிளியநல்லூர் போலீசார் குமுளூர் புள்ளம்பாடி சாலையில்…

சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயம். உதவி செய்வது போல் நடித்து ரூ.5 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் லால்குடி அருகே மேல வாளாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் ராஜம் சுக்கு கம்பெனியின் வினியோகஸ்தராக இருந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் ஜாபர் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பல்வேறு கடைகளில் வசூல்…

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜய காந்துக்கு ஊர்வலமாக சென்று அஞ்சலி.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த விஜயகாந்திற்கு இரங்கல் செலுத்தும் விதமாக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற மவுன அஞ்சலி ஊர்வலம் திருச்சியில் கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி…

வினோத் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மேயர் தொடங்கி வைத்தார்.

திருச்சி வினோத் கண் மருத்துவமனை மற்றும் நகர நிர்வாக துறை இணைந்து திருச்சி உறையூர் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. இந்த கண் சிகிச்சை முகாமிற்கு பத்தாது வார்டு கவுன்சிலர்…

ஜன.10ம் தேதி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திருச்சி வருகை முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்.

திருச்சி மாநகர் மாவட்ட ஓ பன்னீர்செல்வம் அணி நிர்வாகிக ஆலோசனைக் கூட்டம் அவை தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெள்ளமண்டி ஜவஹர்லால் நேரு முன்னிலை வகித்தார் கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்…