Category: திருச்சி

பாரத பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சியில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு..

திருச்சியில் இன்று 01.01.2024 இரவு 20.00 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி-கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப் பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்லவேண்டும். அதேபோல்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளுளினார்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 12-ந்தேதி திருநெடுந்தாண்ட கத்துடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு…

திருச்சியில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் சாந்தி (70), மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10) என ஐந்து பேர் வசித்து வந்தனர்.…

திருச்சியில் முனைவர் ஜான் ராஜ் குமாருக்கு “மக்கள் மருத்துவர்” விருது வழங்கி கௌரவிப்பு.

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது . இவ்விழாவிற்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில்…

குத்துச் சண்டையில் தங்கம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த டிஎஸ்பி அறிவழகன்..

கரூர் மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் கடந்த டிசம்பர் 23,24 ம் தேதிகளில் கரூர் மாவட்டத்தில் மாநில அழைப்பிதழ் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது இப்போட்டியில் பல்வேறு எடை பிரிவில் போட்டிகள் நடைபெற்றது இதில் சென்னை திருச்சி சேலம் கரூர் புதுக்கோட்டை திண்டுக்கல்…

திருச்சி அம்மாபேட்டை, புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு “குடும்பத் திருவிழா” கோலாகலமாக கொண்டாடப் பட்டது.

திருச்சி மறை மாவட்டத்திற்குப்பட்ட, அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இதன்படி, கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,…

தொகுப்பூதிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு மாநாட்டில் காலமுறை ஊதியம் வழங்க கோரி தீர்மானம் – மாநில நிர்வாகி ஜார்ஜ் இனிகோ பேட்டி.

தொகுப்பூதிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு மாநாடு திருச்சி வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் இனிகோ தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் ஆரோக்கிய தாஸ், ஐசக் டேவிட், திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன குறிப்பாக :…

ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற சிலம்ப வீரர் வீராங்கனை களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது இதில் மலேசியா சிங்கப்பூர் பங்களாதேஷ் இலங்கை சிலோன் நேபால்…

தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க கோரி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக திருச்சி தெப்பக்குளம் மேல்நிலைப்பள்ளியில் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் அன்பரசன் தலைமையில் இன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் அழகிரிசாமி வரவேற்புரை ஆற்றினார் மாநில பொதுச் செயலாளர்…

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 17வது மாவட்ட மாநாட்டில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 17வது மாவட்ட மாநாடு திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கிளை செயலாளர் ஸ்ரீரங்கம் கிளை தலைவர் சைவ ராஜூ தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்…

மறைந்த நடிகர் விஜய காந்திற்கு திருச்சியில் பாடை கட்டி, ஒப்பாரி வைத்து கதறி அழுத பெண்கள்.

திரைத்துறையில் தண்ணிகர் இல்லாத தனது நடிப்பினாலும் – எதார்த்தம் நிறைந்த தனது பேச்சினாலும் எத்தனையோ லட்சக்கணக்கான உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகர் விஜயகாந்த் இன்று இல்லை என்பதை அவரது ரசிகர்களால் எந்த வகையிலும் தாங்கி கொள்ள முடியவில்லை. அசாத்தியாமான நடிப்பு –…

கோரிக் கைகளை என்னிடம் சொல்ல வேண்டிய தில்லை, சொல்லா மலேயே செய்து தருவேன் திருச்சியில் நடந்த மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.

திருச்சியில் பிஷப் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. விழாவில் சங்கத்தின் மாநிலத் தலைவர் சேதுராமன்…

தமிழகத்தில் 7% இருந்த பிராமணர் களின் எண்ணிக்கை சமீப காலங்களில் 5% குறைந்துள்ளது – தலைவர் நாராயணன் திருச்சியில் பேட்டி.

திருச்சியில் வருகிற 31ம் தமிழ்நாடு பிராமணர் சங்க மகளிர் அணி/ இளைஞரணி மாநில மாநாடு, திருவானைக்காலில் நடைபெறுகிறது. மாநாடு குறித்து திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தஅச்சங்கத்தின் மாநிலத் தலைவர் நாராயணன் கூறுகையில்:- தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்யப்பட்டு பிராமணர்கள்…

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் உருவப் படத்திற்கு வீரவணக்கம் செலுத்திய சாமானிய மக்கள் நல கட்சியினர்.

இன்று தமிழக சொக்கத்தங்கம் என பொதுமக்களால் பாசமாக அழைக்கப்பட்ட நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு சாமானிய மக்கள் நலக் கட்சி தமிழ்ப்புலிகள் கட்சி மக்கள் உரிமை மீட்பு இயக்கம் ஆகியோர் இணைந்து கேப்டன் விஜயகாந்த அவர்களுக்கு…

வருகிற ஜன.7ம் தேதி இந்திய கூட்டணியை ஆதரித்து நடைபெற உள்ள மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

வருகிற ஜனவரி 7 ஆம் தேதி திருச்சியில் மக்கள் அதிகாரம் தலைமையில் பாசிச BJP யை தோற்கடிப்போம்! INDIA வை ஆதரிப்போம்! என்ற தலைப்பில் தமிழகம் தழுவிய பிரம்மாண்ட பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. அதனை விளக்கும் வகையில் நேற்று…