Category: திருச்சி

திருச்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.19.76 கோடி திட்டப் பணிகளை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம். எட்டரை கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 19.76 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து. புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, டிராக்டர் மற்றும்…

உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் சார்பில் திருச்சியில் நடந்த சிலம்பம் ஒரு தேடல் லீக் போட்டி – ஆர்வமுடன் பங்கேற்ற வீரர்கள்.

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். சிலம்பாட்டம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில், இந்தியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள குறிஞ்சி மலைகள் வரை இந்த கலை அதன் வரலாற்றைக் காட்டுகிறது.…

கர்ப்பிணி பெண்களுக்கு மங்கல பொருட்களை வழங்கி வாழ்த்திய அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், தமிழக நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, கர்ப்பிணி…

சர்வதேச உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடந்த “தனித்திரு” நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி பங்கேற்பு.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை யொட்டி ரோட்டரி மாவட்டம் 3000, கல்வியாளர்கள் சங்கமம், அன்பில் அறக்கட்டளை இணைந்து தனித்திரு அறிவால், ஆற்றலால் மாணவியரை கொண்டாடும் நிகழ்ச்சி திருச்சி காட்டூர் மான் போர்டு பள்ளியில் இன்று நடந்தது. ரோட்டரி மாவட்டம் 3000 மாவட்ட…

சீரற்ற இதய துடிப்பு பிரச்சினைகளுக்கு திருச்சி அப்போலோ மருத்துவ மனையில் அதிநவீன சிகிச்சை டாக்டர் விஜயசேகர் பேட்டி.

சீரற்ற அதீத இதயதுடிப்பு பிரச்சினைகளால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் நோயாளிகளை அதிநவீன சிகிச்சை முறையின் மூலம் குணப்படுத்தி திருச்சி அப்போலோ மருத்துவமனை சாதனை படைத்து வருகிறது. அப்போலோ மருத்துவமனையின் எலெக்ட்ரோ பிசியாலஜி துறை மருத்துவர்கள் இந்த சாதனைக்கு காரணமாக உள்ளனர்.…

மகாளய அமாவாசை – தர்ப்பணம் கொடுக்க காவேரி அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்.

பித்ருக்களின் முக்கிய நாளான அம்மாவாசைக்கு முன் வருவது மகாளயம் என்று பெயர். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் இல்லத்தில் கூடும் நேரமே மகாளயபட்சம் ஆகும். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு முன்…

இந்தியா முழுவதும் 2.5 லட்சம் கிராமங்களுக்கு விவசாய நிதி வழங்க ஏற்பாடு – எச்டிஎஃப்சி வங்கியின் குழுத் தலைவர் ராகுல் ஷியாம் சுக்லா பேட்டி.

எச்டிஎஃப்சி வங்கியின் குழுத் தலைவர் ராகுல் ஷியாம் சுக்லா திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கையில் கூறியதாவது:- “எச்டிஎஃப்சி வங்கியானது நாட்டின் பின்தங்கிய இடங்களில் கிளை வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் நகர்ப்புற கிராமப்புற இடைவெளியைக்குறைக்கிறது. திருச்சியில் நடைபெறும் லோன் மேளா மூலம், கிராமப்புறங்களைச்…

திருச்சி ஏர்போர்ட் வந்த மத்திய அமைச்சர் சார்பானந்த சோனாவாலுக்கு பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் உற்சாக வரவேற்பு.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அதாவது நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நாளை(அக்டோபர்14) முதல்…

வருகிற 15-ம் தேதி நல்லோர் வட்டம் சார்பில் கலாம் 4-ம் ஆண்டை முன்னிட்டு 1000 இளைஞர்கள் சந்திப்பு – விழா பொறுப்பாளர் நவிலு சுப்ரமணியன்.

நல்லோர் வட்டம் சார்பில் கலாம் 4-ம் ஆண்டு விழா வருகிற அக்டோபர் 15ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது இதுகுறித்து நல்லோர் வட்டம் விழா பொறுப்பாளர் நவிலு சுப்ரமணியன் இன்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நல்லோர் வட்டம் சார்பில்…

தேசிய அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு.

கோவாவில் நடைபெற்ற தங்கப்பதக்கம் சிலம்பம் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் டைனமிக் சிலம்பம் ஸ்ட்ரீட் ஃபயிட் சிலம்பம் அகடாமி,சிலம்பம் கலைக்குழுவினரின் 29 குழந்தைகள் கோவாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதுவரை, இழப்பீடு பெறவில்லை – குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திவ்யா குப்தா பேட்டி.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் திவ்யா குப்தா, திருச்சியில், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, 3 அமர்வுகளாக ஆய்வு செய்யப்படுகிறது. ஆரோக்கியமான மற்றும் வலிமையான தேசம் உருவாக, குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும்.…

பச்சை கிளிகளை பிடித்து விற்பனை செய்ய முயன்ற 2-பெண்கள் உட்பட 5-பேர் திருச்சியில் கைது.

திருச்சியில் பிரதான கடைவீதிகள், சந்தைகளில் பச்சை கிளிகள் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர்…

உலக கண் பார்வை தினம் – கண்களை கருப்பு துணியால் கட்டிகொண்டு விழிப்புணர்வு மனித சங்கிலி.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2வது வியாழக்கிழமை உலக கண் பார்வை தினம் கடைப்பிக்கப்பட்டு வருகிறது. பார்வையின்மை மற்றும் பார்வை குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பு பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்து வதற்காகவும் உலக கண் பார்வை…

வாகனங்களின் வரியை 5% உயர்த்தி இருப்பது வருத்தம் அளிக்கிறது – நடிகர் சரத்குமார் பேட்டி.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் : காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தான் தற்போது இருக்கிறார்கள் – அவர்களுக்கு அதிகம் தண்ணீர் இருக்கும்போது திறந்து…

5-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கால்நடை ஆய்வாளர்கள் திருச்சியில் உண்ணா விரத போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடாஜலம் தலைமையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கோரிக்கை விளக்க உரையை மாவட்ட செயலாளர்கள் பன்னீர்செல்வம், ஆனந்தராஜா, முத்துக்குமார், ரவி…