Category: திருச்சி

திருச்சியில் 243 பேருக்கான பணி நியமன ஆணையை மத்திய இணை அமைச்சர் அஜய் பட் இன்று வழங்கினார்.

4வது ரோஸ்கர் மேளாவை’ பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். திருச்சியில் 243 பேருக்கு பணி ஆணைகளை மத்திய அமைச்சர் அஜய் பட் வழங்கினார். ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று,…

அதிமுக சார்பில் 5-ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு – தற்போது மாநில இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகிலுள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் அதிமுக மாநகர் மாவட்டத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயுருமான ஜெ. சீனிவாசன் நோன்பு…

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து – சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருச்சி மாநகரம் முழுவதும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. குழாய்கள் மூலம் செல்லப்படும் கழிவுநீர்களை சுத்திகரிப்பதற்காக சுத்திகரிப்பு நிலையம் ஒவ்வொரு பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்தந்த பகுதி…

அம்பேத்கர் 133-வது பிறந்த நாள் – மேயர் அன்பழகன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் படி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி…

ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வலியுறுத்தி (ஐ.என்.டி.யு.சி.) சார்பில் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம்.

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வலியுறுத்தி இந்திய தேசிய டிரேட்ஸ் யூனியன் காங்கிரஸ் (ஐ.என்.டி.யு.சி.) சார்பில் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ஐ.என்.டி.யு.சி. மாநில துணைத்தலைவரும், முன்னாள்…

காவல்துறை ஆன்லைன் அபராதம் முறையை கைவிட வேண்டும் – ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், கேரளாவை போல் தமிழக அரசு செயலியை (App) உருவாக்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு ரூபாய் 9000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், மானிய விலையில் பெட்ரோல், டீசல், கேஸ் வழங்கிட…

சி.ஆர்.பி.எஃப் காவலர் தேர்வை தமிழில் நடத்த வலியுறுத்தி DYFI சார்பில் ஆர்ப்பாட்டம்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில், மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, உள்துறை அமைச்சகத்தின் மூலம் சிஆர்பிஎப் (CRPF) காவலர் தேர்வில் இந்தியா…

கல்மந்தை காலனி அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை உடனடியாக மக்களுக்கு வழங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்.

திருச்சி கல்மந்தை காலனி பகுதியில் திருச்சி மாநகராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அரசாங்கம் சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது அதன் பிறகு அந்த வீடுகள் பழுதடைந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் குடிசை மற்றும் ஓட்டு…

ஸ்ரீரங்கம் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் இன்று துவங்கியது.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி…

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரி நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்.

நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பேரவை மற்றும் திருச்சி அனைத்து மீட்டர் (தனி) ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பாராளுமன்ற செயலாளர் வக்கீல் பிரபு தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர்…

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சி – எம்.பி திருநாவுக் கரசு பேட்டி.

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் 95 சதவீதம் முழுமையாக முடிந்ததை போட்டி அடுத்த வாரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று திருச்சி நாடாளுமன்ற…

திருச்சி YMCA பள்ளியில் குழந்தைகள் விளையாட்டு மையத்தை திருநாவுக் கரசர் எம்பி திறந்து வைத்தார்.

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள YMCA மழலையர் துவக்கப் பள்ளியில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ₹.50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு…

ஆவின் நிர்வாகத்தை கண்டித்து காலி பால் புட்டியுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்.

குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சத்தான ஆவின் பாலை வழங்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சூழலில், போலியாக, செயற்கையான தட்டுப்பாடை ஏற்படுத்தி ஆவின் பால் உரிய நேரத்தில் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக முழுவதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக…

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் இணை செயலாளர் சீனிவாசன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

திருச்சி மாநகர் மாவட்ட கழக, அதிமுக தில்லைநகர் பகுதி கழகம் சார்பில், பாரதி நகர் நண்பர்கள் குழு ஏற்பாட்டில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அதிமுக…

வருகிற 15-ம் தேதி இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் – திருநாவுக் கரசு எம்.பி பேட்டி.

திருச்சி மெகா காட்டில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- நாடாளுமன்ற ராகுல்காந்தி பேச்சி மோடி அரசை ஆட்டம் காண செய்துள்ளது.அம்பானி குடும்பத்தினர் 260வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு…

தற்போதைய செய்திகள்