Confederation of Indian Industry (CII) திருச்சி கிளையின் சார்பில், ஐ.டி மற்றும் ஐ.டி.ஈ.எஸ் துறைக்கான முக்கிய மாநாடு CII Trichy Connect என்ற தலைப்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரம்யாஸ் ஹோட்டல் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் “டிஸ்கவர் திருச்சி: இந்தியாவின் எழும் ஜிசிசி மையம்” என்ற தலைப்பில் ஒரு விசேச அறிக்கையை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ வெளியிட்டார். அருகில் சேர்மன் அஜய் ஜெயராஜ், இயக்குனர் பாலசுப்பிரமணியம், இயக்குனர் ஆனந்த் பிச்சைக்கனி மற்றும் பலர் உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாநாட்டில் எம் பி துரை வைகோ பேசுகையில்:- திருச்சியில் சிறந்த போக்குவரத்து இணைப்பு, முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் வலுவான தொழில்த்துறை நிருவனங்களுடன் திருச்சியின் அமைவிடம், தமிழ்நாட்டின் இதயப்பகுதியாக உள்ளதை, திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதற்கு நான் மேற்கொண்டு வருகிறேன் இது, ஏற்றுமதியை எளிதாக்கி, வேளாண் மற்றும் தொழில் துறைகளுக்கு உலகலாவிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் G-கார்னரில் உயர்மட்டச் சுழற்சாலை, அணுகு சாலை அகலப்படுத்துதல், சஞ்சீவி நகர் மற்றும் கொள்ளிடம் Y-கார்னரில் சுரங்கப்பாதை அமைத்தல், ESIC மருத்துவமனை மேம்பாடு,
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தொடக்கம் மற்றும் இரயில்வே துறை கட்டுமானங்கள் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தல அந்தஸ்து பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன். சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் Global Capablity Centres (GCC) ஈர்ப்பது ஆகியவற்றின் மூலம் திருச்சியை தொழில்நுட்ப மற்றும் சேவை மையமாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என பேசினார்.