திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நடேச தமிழார்வன் படுகொலையை கண்டித்தும், சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி தலைமையில் கிழக்குப் பகுதி செயலாளர் அன்சர்தீன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வா குழு முன்னாள் உறுப்பினர் செல்வராஜ் திருச்சி மாவட்டஏஐடியுசி பொதுச்செயலாளர் சுரேஷ் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை சிவா பொன்னுதுரை

மாணவர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் இப்ராஹீம். இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் செல்வகுமார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சூர்யா மாதர் சங்கம் ஆயிஷா. பார்வதி கட்டுமான சங்கம் முருகன் வங்கி ஊழியர் சங்கம் ராமராஜ். பகுதி செயலாளர்கள் சண்முகம், செல்வகுமார் கட்சி கிளை செயலாளர்கள். மற்றும் தரைக்கடை சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.