பொன்மலையில் CWM நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவின்படி SRMU மூலம் போராடி தொழிலாளர்களுக்கு பெற்று தந்த OT யை தொழிலாளர்களுக்கு வழங்க மறுத்து தொழிலாளர்களை மன உழைச்சலுக்கு ஆளாக்கிய CWM நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன கூட்டம் SRMU துணை பொதுச்செயலாளர் பொன்மலை பொறுப்பாளர் திருச்சி கோட்ட செயலாளருமான வீரசேகரன் தலைமையில் திருச்சி பொன்மலை பணிமனை வளாகத்தின் உள்ளே சமூக இடைவெளியில் இந்த கண்டன கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்தின் விளக்க உரையாக CWM நிர்வாகம் ஒரே அங்கீகார சங்கமான SRMU பேரியக்கத்தை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக OT ஷாப்பில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இனி OT கிடையாது என்றும் இன்சென்டிவ் வழங்கப்படும் என்று முடிவெடுத்து தென்னக இரயில்வே தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பியது. எனவே நமது இரயில்வே தொழிலாளர்களின் SRMU பொதுச்செயலாளர் AIRF அகில இந்திய தலைவர் டாக்டர் கண்ணையா, SRMU தலைவர் HMS தேசிய தலைவர் தொழிற்சங்க சாணக்கியர் ராஜா ஸ்ரீதர் / SRMU துணை பொதுச்செயலாளர் AIRF தென்மண்டல செயலாளர் ஈஸ்வர்லால் ஆகியோரிடம் எடுத்து கூறியதன் பலனாக பொதுச்செயலாளர் PCME ,PCPO,GM ஆகியோரிடம் பேசி விதி மீறல் செய்த CWM உத்தரவை நிறுத்தி வைத்து இனி எந்த முடிவு எடுத்தாலும் SRMU பொறுப்பாளரிடம் கலந்து ஆலோசிக்காமல் எடுக்ககூடாது என்று உத்தரவு வழங்கி SRMU எப்போது கூட்டத்தை நடத்த சொல்கிறதோ அந்த நாளில் கலந்து ஆலோசித்து ஒப்புதல் பெற்ற பின்புதான் எதையும் நடைமுறைபடுத்தவேண்டும் என்றும் இனி தன்னிச்சையாக எதுவும் முடிவு எடுக்கக்கூடாது என்றும் உத்தரவு வழங்கியுள்ளார்கள்.என்பதை எடுத்து கூறினார்.